பிரிவுகள்….

தமிழ் பெயர்கள்

 

 நீங்கள் வாகனம் ஓட்டுபவரா, அடிக்கடி டி.வி. முன் அமர்ந்து இருப்பவரா? நாற்காலியில் அமர்ந்து அதிக நேரம் வேலை செய்யக் கூடியவரா? அடிக்கடி `கவலை’கள் உங்களை வாட்டும்படி வைத்துக் கொள்பவரா? இதற்கெல்லாம் நீங்கள் ஆம் என்றால் இந்தக் கட்டுரையை அவசியம் படிக்க வேண்டும்! இப்போது அதிகமாகப் பரவி வரும் நோய். குறிப்பாக 40 வயதுக்கு மேல் பரவலாகக் காணப்படும் நோய் `கழுத்து இறுக்கம்’ எனப்படும். “செர்விகல் ஸ்பாண்டிலைட்டிஸ்!”

 
நம் கழுத்து வலிக்கத் தொடங்கும்வரை நாம் கழுத்துப் பற்றி நினைத்துப் பார்ப்பதே இல்லை. அது ஏதோ சங்கிலிகளையும், நெக்லஸ்களையும், மலர்மாலைகளையும் ஏந்துகிற ஒரு ஸ்டாண்ட் என்றே மதிக்கிறோம்.
 
ஆனால், கழுத்துத் தான் தலையைத் தாங்குகிற முக்கிய உறுப்பு. ஐம்பொறிகளில் மூக்கு, வாய், கண், காது என்ற முக்கியமான நான்கு பொறிகள் செயல்பட உதவும் பீடம.
 
தலை, செர்விகல் வெர்டிப்ரே எனப்படும் ஏழு சிறிய எலும்புகளாலும், 332 சிக்கலான தசைகளாலும் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் மேலதிக செய்திகளை வாசிப்பதற்கு »

 மீன இராசி – விருச்சிக லக்கினம். லக்கினத்தில் இராகு, 5-ல் சந்திரன், 6-ல் புதன், 7-ல் சுக்கிரன், குரு, கேது, சூரியன், 10-ல் செவ்வாய், 11-ல் சனி. அருமையான நேரம். பொதுவாக பஞ்சமஸ்தானம் – சப்தமஸ்தானம் – ஜீவனஸ்தானம் – லாபஸ்தானம் அருமையாக அமைய வேண்டும் அது அமைந்துவிட்டது. நாட்டுமக்கள் வளமோடு மகிழ்ச்சியோடு வாழ்வார்கள். இதன் மேலதிக செய்திகளை வாசிப்பதற்கு »

 

கெருடாவில் பகுதியில் உள்ள பாடசாலை மாணவன் ஒருவர் கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் கெருடாவில் தெற்கைச் சேர்ந்த கோணேஸ்வர குருக்கள் செந்தூரன் வயது 15 என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளர். இதன் மேலதிக செய்திகளை வாசிப்பதற்கு »

பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பேர்க் தனது நிண்டநாள் தோழியும், காதலியுமான Priscilla Chan ஐ திருமணம் முடித்துள்ளார்.

கலிபோர்னியாவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இத்திருமணம் நிகழ்வு நடைபெற்றுள்ளது. தனது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் 100 பேருக்கு மட்டும் அழைப்பு விடப்பட்டுள்ளது. இதன் மேலதிக செய்திகளை வாசிப்பதற்கு »

வன்னியின் இறுதிப்போரில் இறந்தவர்களின் ஆத்மசாந்திக்காகவும், காணாமல் போனவர்கள் விடுதலையை வேண்டியும் கிளிநொச்சி முருகன் ஆலயம் மற்றும் கிளிநொச்சி தேவாலயங்களில் மக்களால் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. நேற்று முற்பகல் கிளிநொச்சியில் இந்நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன. முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை ஒட்டி பல மக்கள் தேவாலயங்களில் சென்று வழிபட்டதோடு, சிவன் மற்றும் முருகன் ஆலயங்களில் கூட்டு வழிபாடுகளிலும் ஈடுபட்டனர். இராணுவத்தினரின் பலத்த கெடுபிடிகளுக்கு மத்தியில் இவை இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இதன் மேலதிக செய்திகளை வாசிப்பதற்கு »

சலவை இயந்திரத்தில் குழந்தையை வைத்து வேடிக்கை பார்த்த தம்பதியர், இயந்திரம் சுற்ற ஆரம்பித்ததும் கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த இளம் தம்பதியர் தங்கள் குழந்தையுடன் பொது சலவை இயந்திர நிலையத்தில், துணிகளை சலவைக்கு கொடுக்க சென்றனர்.

துணி சலவை முடியும் வரை குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த இந்த தம்பதிக்கு திடீரென விபரீத புத்தி ஏற்பட்டது.

அங்கு காலியாக இருந்த ஒரு சலவை இயந்திரத்தின் கதவை திறந்து, அதில் குழந்தையை உட்கார வைத்து வேடிக்கை காட்ட நினைத்தனர். இதன் மேலதிக செய்திகளை வாசிப்பதற்கு »

33 வயதான Desmond Hatchett என்ற அமெரிக்கருக்கு 30 பிள்ளைகளுக்கு தந்தையாகியுள்ளார்.இவருக்கு 11மனைவியரும் உள்ளனர்

குழந்தை நலக் கொடுப்பனவுகளை வழங்குவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறித்த நபர் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

Desmond Hatchett இன் மாதச் சம்பளத்தின் அரைவாசிப் பகுதி 30 பிள்ளைகளிடையே பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவரின் மூத்த பிள்ளையின் வயது 14.

30 பிள்ளைகளையும் தனித்தனியாக அடையாளம் காணக்கூடிய ஆற்ற இருப்பதாக டெஸ்மண்ட் தெரிவித்துள்ளார். இதன் மேலதிக செய்திகளை வாசிப்பதற்கு »

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் ஆயிரக் கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட மே 18 ஆம் நாளை நினைவு கூர்ந்து சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழவினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழின அழிப்பு நாள் சிவந்த மே18 ஜெனீவா ஐ.நா. முன்றலில் முருகதாசன் திடலில் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது. இந்நிகழ்வு பொதுச்சுடரேற்றல், தேசியக்கொடியேற்றல், ஈகச்சுடரேற்றல், அகவணக்கத்துடன் ஆரம்பமானது.

திடலில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கல் சமாதி முன்பாக நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் கவிதாஞ்சலி, சியோன் நகர சிறார்களின் நாட்டியம், உரைகள் ஆகியவை இடம்பெற்றன.தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த கவிஞரும் ஆய்வாளருமான மீனா கந்தசாமி உரையாற்றுகையில், “தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை வெளியே இருந்து யாராவது வந்து நடாத்துவார்கள் என நினைக்கக் கூடாது. தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் விடயத்தில் தமிழ் மக்கள் தாமாகவே முயற்சிக்க வேண்டும். அதேவேளை போராட்டம் முடிந்து விட்டது என்ற முடிவிற்கும் யாரும் வந்து விடக் கூடாது. அது தொடரும் என நினைத்து முயற்சிக்க வேண்டும் ;„ என்றார். இதன் மேலதிக செய்திகளை வாசிப்பதற்கு »

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தகாலப்பகுதியான மே 16,17,18 ஆகிய நாட்களில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் பலர் காணாமல் போயுள்ளனர். சரணடைந்தவர்களில் பலர் மனைவி, பிள்ளைகளோடும் சரணடைந்துள்ளனர். அவர்களின் நிலையென்ன என்பது தொடர்பாக இதுவரை சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை. தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன், மற்றும் புலித்தேவன் உள்ளிட்ட பலர் சரணடைந்தமை பலரும் அறிந்ததே. இந்நிலையில் அவர்கள் சிறிலங்கா படையினரால் சித்திரவதைகளின் பின்னர் படுகொலைசெய்யப்பட்டுள்ளமை காட்டும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இதன் மேலதிக செய்திகளை வாசிப்பதற்கு »

பிரிவுகள்….

காலநிலை

Categories