visits since Apr 01, 2014

Besucherzaehler

வின்ரி அமைப்புக்கள்
உங்கள் கருத்து

திறந்த மனதுடன் முதன் முறையாக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான விசேட பிரதிநிதி நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது சர்வதேச ரீதியில் போர்க் குற்ற விசாரணைக்கு வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் நவநீதம்பிள்ளை ரொயிட்டர் செய்தி சேவைக்கு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை முப்பது வருடகால யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் முதன் முறையாக நாளை மறுதினம் (25ஆம் திகதி) நவநீதம்பிள்ளை உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.

இலங்கை வரவுள்ள அவர் 30ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பதோடு ஜனாதிபதி, எதிர்க்கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதோடு வட கிழக்கு பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

இலங்கையின் மறுசீரமைப்பு நல்லிணக்க செயற்பாடுகளை நேரில் அறியவேண்டும் எனவும் இலங்கையின் முன்னேற்றம் மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பிலும் அறிய வேண்டும் எனவும் ரொயிட்டர் செய்திச் சேவையுடனான மின்னஞ்சல் உரையாடலில் அவர் தெரிவித்துள்ளார்.

“எந்த விடயத்தையும் முன் கூட்டியே கணிக்கவில்லை, விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் பல இருக்கின்றன. சாதகமான அபிவிருத்தி குறித்து பேசப்பட வேண்டி உள்ளது. அதனால் நான் மிகவும் நிறந்த மனதுடனேயே செல்கிறேன். அதன் மூலம் எனது சொந்த ஆராய்வில் சீரான மதிப்பீட்டு ஒன்றை மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன்.” நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

101

மேலும் செய்திகளை வாசிக்க

104

மேலும் செய்திகளை வாசிக்க

105

மேலும் தகவல்களை வாசிக்க

106

மேலும் கவிதைகளை வாசிக்க

100

மேலும் செய்திகளை வாசிக்க

103

மேலும் தகவல்களை வாசிக்க

103

மேலும் அறிந்து கொள்வோம்.

108

மேலும் படங்களை பார்வையிட