visits since Apr 01, 2014

Besucherzaehler

வின்ரி அமைப்புக்கள்
உங்கள் கருத்து

kalai-virudsam-1 (Small)கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கனகாம்பிகைக்குளம் கிராமத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் கணவரை இறுதி யுத்தத்தில் இழந்து மூன்று பிள்ளைகளுடன் வசித்துவரும் இந்துசிகாமணி பரிமிளா என்பவருக்கு இன்று கலைவிருட்சம் அமைப்பினரால் சுயதொழில் ஊக்குவிப்பு உதவிகள் வழங்கப்பட்டது.
சுயதொழிலை செய்வதற்கு ஏற்ற விலாசமான கோழிக்கூடு ஒன்றும் ஒரு தொகை கோழிக்குஞ்சுகளும் தீனிகளும் இன்று கலைவிருட்சம் அமைப்பினால் வழங்கப்பட்டது.

இந்த அமைப்பின் செயற்பாட்டாளர்களான அம்பன் நிதர்ஷன் கடலூர் சுமன் குடத்தனையூர் சிவா ஆகியோர் நேரடியாக சென்று வழங்கி வைத்தனர்.  இவ் உதவிகளை சுவிஸில் உள்ள கலைவிருட்சம் இலங்கை கலைவிருட்சம் கிளை செயற்பாட்டாளர்கள் ஊடாக வழங்கியுள்ளனர்.

இவ் உதவிகளை பெற்ற குடும்பத்தலைவி பரிமிளா கலைவிருட்சம் செயற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

யுத்தம் நிறைவடைந்து ஆறுவருடம் கடந்த நிலையில் இன்று தான் கலைவிருட்சம் என்ற அமைப்பினரால் தமக்கு இவ்வாறனதொரு உதவி வழங்கப்பட்டது எனவும் இவ் உதவிகளை செவ்வனவே திறம்படச்செய்து எனது பிள்ளைகளின் கல்வித்தரத்தை உயர்த்துவேன் என்றும் இதில் வரும் வருமானங்களை சரியான முறையில் பயன்படுத்தி எனது குடுப்பத்தை வழிநடத்துவேன் என அவர் கூறினார். இவ் உதவிகளை எதிர்பாராது வழங்கிய கலைவிருட்சம் அமைப்பினருக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.kalai-virudsam-1 (Small)

kalai-virudsam-1-1 (Small)

kalai-virudsam-2 (Small)

kalai-virudsam-3 (Small)

kalai-virudsam-4 (Small)

101

மேலும் செய்திகளை வாசிக்க

104

மேலும் செய்திகளை வாசிக்க

105

மேலும் தகவல்களை வாசிக்க

106

மேலும் கவிதைகளை வாசிக்க

100

மேலும் செய்திகளை வாசிக்க

103

மேலும் தகவல்களை வாசிக்க

103

மேலும் அறிந்து கொள்வோம்.

108

மேலும் படங்களை பார்வையிட