visits since Apr 01, 2014

Besucherzaehler

வின்ரி அமைப்புக்கள்
உங்கள் கருத்து

எங்கு பார்த்தாலும் மூன்றாம் உலகப்போர் பற்றிய திகிலூட்டும் செய்திகள் பலருக்கும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்திக் கொண்டு வருகின்றது. மிக முக்கியமான மூன்றாம் உலகப்போர் இதோ வந்து விட்டது, நாளை நடக்கப்போகின்றது என்ற எதிர்வுகூறல்களோடு,

625.147.560.350.160.300.053.800.264.160.90 (5)மேலைத்தேய ஊடகங்களும் அன்றாடம் புது விதமான செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் மே 13ஆம் தினம் முதல் உலகப்போர் ஆரம்பமாகும் என்றும் செய்தி வெளிவந்தமை மறக்கக் கூடிய செய்தியல்ல.

அதனைத் தொடர்ந்து வட கொரியாவை தாக்க ஆயத்தமாகி வருவதாக கூறப்பட்ட அமெரிக்கா, திடீரென சீனா மீது அணு குண்டு போட ஆயத்தமாகி வருவதாகவும் ஒரு சில செய்திகள் வெளிவருகின்றன. இது சாத்தியமா?

உண்மையில் வட கொரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துமாயின், சீனா அமெரிக்காவிற்கு எதிராக தாக்குதல் நடத்தும். சீனாவிற்கு உதவ ரஷ்யாவும், ஜப்பானும் கூட இணைந்து விடக் கூடிய நிலையே உள்ளது.

அப்படிப் பார்க்கும் போது அமெரிக்கா தன் கையால் தனக்கே சங்கு ஊதிக்கொள்ளும் நிலை உருவாகி விடும். ஆதலால் இப்போதைக்கு அமெரிக்கா அத்தகைய முட்டாள் தனமான காரியத்தை துணிந்து செய்து விடாது.

உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப்படைத்துக் கொண்டு வரும் இராஜ தந்திரியான அமெரிக்கா, உலகின் தனக்கு நிகர் அல்லது தனக்கு அடுத்தபடியாக பலம் வாய்த நாடுகளாக இருக்கக் கூடிய ரஷ்யா, சீனா போன்ற நாடுகளை அத்தனை எளிதில் பகையாளர்களாக மாற்றிக் கொள்ளாது.

இவை ஒரு புறம் இருக்கட்டும் வட கொரியாவினதும், ட்ரம்பினதும் அடுத்த கட்ட நடவடிக்கை எது என்பது இது வரையில் தெரியாத நிலையில் பல வித செய்திகள் வெளிவருகின்றதால் பதற்ற நிலை மட்டுமே அதிகரித்து வருகின்றது.

எவ்வாறெனினும் இப்போது அமெரிக்காவோ, வட கொரியாவோ, சீனாவோ யாராவது ஒருவர் ஓர் குண்டை எதிராளி பக்கம் வெடிக்க வைத்தாலும், அது மிகப் பெரிய உலக யுத்தமாக மாறிவிடும் என்ற நிலையே உள்ளது என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

நிலைமை இவ்வாறு இருக்க அவ்வாறானதொரு யுத்தம் ஏற்படுமாயின் இலங்கைக்கு இதில் என்ன பங்களிப்பு இருக்கக் கூடும்? போர் பதற்றம் இலங்கையையும் ஆட் கொள்ளுமா? என்ற கேள்வியை இலங்கையர்கள் சிந்தித்துப் பார்ப்பது முக்கியம்.

ஏற்கனவே ஓர் உள்நாட்டு யுத்தத்தில் இருந்தே இலங்கையும், மக்களும் மீள் எழ முடியாத நிலையில், உலகப்போரும் அதில் இலங்கையும்? இது என்ன வேடிக்கை என்ற கண்ணோட்டம் பலருக்கு இருக்கக் கூடும்.

அதில் தவறில்லை. ஆனால் இலங்கை மிகச் சிறிய நாடு என்றாலும் கூட ஒட்டு மொத்த உலகத்திற்கும் முக்கியமான ஓர் நாடு என்பதில் எவருக்கும் எந்தவித ஐயமும் இல்லை.

கொரிய நாட்டில் ஓர் போர் வெடிக்குமானால் அதன் தாக்கம் இலங்கையிலும் எதிரொளிக்கும் என்பதே இப்போதைக்கு உண்மை நிலை. காரணம் அமெரிக்காவிற்கும், இலங்கைக்கும் வரலாறு காணாத வகையில் பாரிய நெருக்கம் இப்போது மறைமுகமாகவும், நேரடியாகவும் இருக்கின்ற காரணத்தினாலேயே இந்தச் சந்தேகம் எழுகின்றது.

அதனையும் தாண்டி வட கொரியாவுடன் அமெரிக்கா யுத்தம் ஒன்றை செய்யுமானால் அது பசுபிக் பிராந்தியம் முழுவதும் எதிரொளிக்கக் கூடும் என்பதும் கூட யதார்த்தமே.

advertisement

இங்கு ஜாம்பவானான அமெரிக்கா ஆசிய பிராந்தியத்தில் நெருங்கிய நட்பு நாடுகளாக வெளிப்படுத்தும் நாடுகளில் இலங்கையும் கூட முக்கியமான இடத்தினை வகித்துக் கொண்டு வருகின்றது.

இதனை வலுப்படுத்துவதாய் அமைகின்றது 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளைப் பீடாதிபதி அட்மிரல் கூறிய கருத்து.,

அதாவது, வட கொரியா மற்றும் ஐ. எஸ்.ஐ. எஸ் போன்றவற்றின் அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்த பசுபிக் பிராந்திய எமது கூட்டாளிகளான இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம் போன்ற நாடுகள் தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக கூறியிருந்தார்.

இது அமெரிக்காவுடன் இலங்கை கொண்டிருக்கும் நட்புறவை வெளிக்காட்டுகின்றது. மிக முக்கியமாக அட்மிரலின் கருத்துபடி வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர் கொள்ள இலங்கையும் பங்களிப்பை செய்து வருகின்றது என்ற தொணிப் பொருள் அழுத்தமாய் அமைந்துள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

அதேபோன்று 2007ஆம் ஆண்டு இலங்கை மற்றும் அமெரிக்கா செய்து கொண்ட கையகப்படுத்தல் மற்றும் குறுக்குச் சேவைகள் எனப்படும் பாதுகாப்பு ரீதியான உடன்பாடு நிறைவடைந்து விட்டது.

என்றாலும் அதனை புதுப்பித்துக் கொள்ள பேச்சுவார்த்தைகள் தீவிரமான இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது. என்றபோதும் அதன் உண்மை நிலை பற்றி எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை.

இவ்வாறான நிலையில் அமெரிக்காவின் கட்டளைப்படைத் தளபதிகளும், போர்க்கப்பல்களும் இலங்கைக்கு வந்து செல்வது தற்போது அதிகரித்துக் கொண்டு வருகின்றது.

இதன் மூலம் அமெரிக்காவிற்கும், இலங்கைக்கும் பாதுகாப்பு ரீதியில் மறைமுக ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் வலுப்பெற்றுக் கொண்டு வருகின்றது.

குறித்த உடன்பாடு மீண்டும் புதுப்பிக்கப்படும் போது, அமெரிக்காவின் தளமாக இலங்கையில் துறைமுகங்கள் மாற்றம் பெரும் என்பதில் ஐயமில்லை என்றே தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வட கொரியாவுடன் அல்லது சீனாவுடன் அமெரிக்கா போர் நடவடிக்கையில் ஈடுபடும் போது இந்தியப் பெருங்கடல் வாயிலாக பயணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

அப்படி பயணிக்கும் போது இலங்கைத் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை பயன் படுத்திக் கொள்ள அமெரிக்கா நிச்சயமாக எத்தனிக்கும். காரணம் இலங்கையில் கடற்பரப்பு இந்த (அமெரிக்காவின்) யுத்த நடவடிக்கைகளுக்கு அவசியமானதாகும்.

அது மட்டுமல்ல வடகொரியாவிற்கும், இலங்கைக்கும் இரகசிய ஒப்பந்தங்கள் இருக்கின்றதா என்ற கேள்வியை ஜக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை எழுப்பியுள்ளது.

இந்த விடயம் கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி ஜக்கிய நாடுகள் நிபுணர் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன 2015ஆம் ஆண்டுகளில் வட கொரிய இராஜ தந்திரியை சந்தித்தமை தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் அமெரிக்கா இலங்கையுடன் கொண்டிருக்கும் அளவு கடந்த நட்பை வெளிப்படுத்துகின்றது.

மேலும் வடகொரியாவின் இராஜதந்திரிகளான கிம் ஹயோக் சான் மற்றும் யொன் சோல் யங் ஆகியோர் இலங்கை வந்து துறைமுகங்களை பார்வையிட்டதும், 2015 நவம்பர் மாதம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவுடன் நடத்திய பேச்சு வார்த்தை தொடர்பிலும்.,

advertisement

ஐக்கிய நாடுகள் சபை எழுப்பிய கேள்விகளுக்கு இன்று வரை இலங்கை பதில் வழங்க வில்லை என்றும் கூறப்படுகின்றது.

இந்த விடயங்கள் வடகொரியாவும் இலங்கையுடன் நட்புகொள்ள திட்டமிட்டு வருகின்றமையை தெளிவு படுத்துவதாய் அமைகின்றது.

இவை ஒரு புறம் இருக்க இலங்கைத் துறைமுகங்களுக்கு அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் அடிக்கடி வந்து செல்வதும், இலங்கையில் பாதுகாப்பு தரப்புடனும், அரசுடனும் பேச்சு வார்த்தைகளை நடத்தி வருவதும் அவதானிக்க முடியுமான ஒன்றாகும்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கை அரசு அமெரிக்காவுடன் கொண்டிருக்கும் நட்பு அதிகரித்தாலும் கூட அதன் நிலைமை, உண்மைத் தன்மை தொடர்பில் இரகசியமாகவே பேணப்பட்டு வருகின்றன.

சீனாவுடனும் இலங்கை கொண்டுள்ள நட்பு ஆரம்ப காலம் முதலாகவே இருந்து வருகின்றமை தெரிந்த விடயமே.

வட கொரியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இடையில் ஓர் யுத்தம் ஏற்படுமாயின் அது மூன்றாம் உலக யுத்தமாக மாறினாலும், மாறாவிட்டாலும் அதன் தாக்கம் மத்தியக் கிழக்கு உட்பட பசுபிக் பிராந்தியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதே உண்மை.

இலங்கை என்பது கடற்பரப்பில் ஓர் கேந்திர மையமாகவும், முக்கிய நாடாகவும் அமைந்துள்ள காரணத்தினால் தற்போது போர் அறைகூவல்களையும், எச்சரிக்கைகளையும் விடுத்துக் கொண்டு இருக்கும் நாடுகளுக்கு இடையே போர் நடக்குமாயின்.,

அந்தப் போர் மூன்றாம் உலகப்போராக மாறினாலும், அதன் தாக்கத்தினை இலங்கையும் அனுபவித்தே ஆகும் என்பதே இப்போதைக்கு உண்மை நிலை. அதன் காரணமாக போர் பதற்றம் அப்படியே அடங்கிப் போக வேண்டும் என்பது முக்கியமானதாகும்.

காரணம் இந்த தாக்கத்தினால் இலங்கை மீள் எழ முடியாத சரிவினையும் கூட சந்திக்கக் கூடும் என்பதும் கூட கசப்பான உண்மையே.

இப்போது பொருளாதார ரீதியில் இலாபத்திற்காக இலங்கை சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் கொண்டுள்ள நட்புறவின் காரணமாகவும் மூன்றாம் உலகப்போர் ஏற்படுமாயின் அதன் விளைவு இலங்கையையும் சிதைத்து விடும்.

101

மேலும் செய்திகளை வாசிக்க

104

மேலும் செய்திகளை வாசிக்க

105

மேலும் தகவல்களை வாசிக்க

106

மேலும் கவிதைகளை வாசிக்க

100

மேலும் செய்திகளை வாசிக்க

103

மேலும் தகவல்களை வாசிக்க

103

மேலும் அறிந்து கொள்வோம்.

108

மேலும் படங்களை பார்வையிட