visits since Apr 01, 2014

Besucherzaehler

வின்ரி அமைப்புக்கள்
உங்கள் கருத்து

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நியாயப்படுத்த எடுக்கும் எந்த முயற்சிகளுக்கும் இடமளிக்கபோவதில்லை என்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் இனவாதத்தின்

625.147.560.350.160.300.053.800.264.160.90 (12) உச்சகட்டமாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நல்லிணக்க நகர்வில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை வடக்கு முதல்வர் சர்வதேசத்திற்கு சுட்டிக்காட்டியுள்ள நிலையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு எவ்வாறு அமைந்துள்ளது என வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நல்லிணக்கத்தை உருவாக்கும் செயற்பாடுகளில் அரசாங்கம் விரைவான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், வடக்கில் பூரண சுதந்திரமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

எனினும், இன்றும் வடக்கின் அரசியல்வாதிகள் சர்வதேச விசாரணைகள், சர்வதேச நீதிபதிகள் என்ற கதைகளை கூறி கொண்டு மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் இனவாதத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளன.

தெற்கில் ராஜபக்சக்களை இனவாதிகள் என விமர்சித்துக்கொண்டு வடக்கில் விக்னேஸ்வரன் போன்றவர்களும் அதே நிலைப்பாட்டில் செயற்பட்டு வருகின்றனர்.

வடக்கின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடக் கூடாது என்ற வகையில் வடமாகாண சபை செயற்படுகின்றது. மக்களுடன் அரசாங்கம் இணைந்து செயற்படுவதன் மூலமே நாட்டில் பலமான நல்லிணக்கம் உருவாக்கப்படும்.

இதை தமிழர் தரப்பு தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழர்களின் தலைவர் அல்ல.

ஆகவே பிரபாகரனை நியாயப்படுத்தும் வகையில் எந்த செயற்பாடுகளை வடக்கில் யார் முன்னெடுத்தாலும் அதை நாம் தடுத்தாக வேண்டும் என எஸ்.பி. திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

101

மேலும் செய்திகளை வாசிக்க

104

மேலும் செய்திகளை வாசிக்க

105

மேலும் தகவல்களை வாசிக்க

106

மேலும் கவிதைகளை வாசிக்க

100

மேலும் செய்திகளை வாசிக்க

103

மேலும் தகவல்களை வாசிக்க

103

மேலும் அறிந்து கொள்வோம்.

108

மேலும் படங்களை பார்வையிட