visits since Apr 01, 2014

Besucherzaehler

வின்ரி அமைப்புக்கள்
உங்கள் கருத்து

சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் கோரி வரும் வெளிநாட்டினர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுவிஸின் மிகப்பெரிய கட்சியான சுவிஸ் மக்கள் கட்சியை(SVP) சேர்ந்த எம்.பியான

625.500.560.350.160.300.053.800.748.160.70 (8) Gregor Rutz என்பவர் தான் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வரும் வெளிநாட்டினர்களுக்கு சதவீத அடிப்படையில் சூரிச் மாகாணத்தில் புகலிடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சுவிஸ் அரசு கடந்த டிசம்பர் மாதம் நிராகரித்தது.

சுவிஸ் மத்திய அரசின் இந்நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த சுவிஸ் மக்கள் கட்சி தன்னுடைய கட்சியை சார்ந்த 60 எம்.பிக்களின் ஆதரவு பெற்று தற்போது நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

இதில், வெளிநாட்டினர்களுக்கு புகலிடம் அளிப்பதை குறைக்க வேண்டும் எனவும், ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த ஊழியர்களுக்கு அதிகளவில் பணி வழங்குவதை விட சூரிச் மாகாணத்தை சேர்ந்த குடிமக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், சுவிஸ் மக்கள் கட்சியின் இந்த மசோதாவிற்கு அதிகளவில் ஆதரவு கிடைக்காத காரணத்தினால் இம்மசோதா சட்டமாக நடைமுறைப்படுத்த வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

2016-ம் ஆண்டு புள்ளிவிபரத்தின் அடிப்படையில் சூரிச் மாகாணத்தில் தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் 3,90,000 பேர், அதாவது 26 சதவிகிதத்தினர் வெளிநாட்டு குடிமக்கள் ஆவர்.

சுவிஸில் தற்போது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை தவிர பிற நாடுகளை சேர்ந்த ஊழியர்களுக்கு மட்டுமே சதவிகித அடிப்படையில் பணி வழங்கப்பட்டு வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதால் இந்நாடுகளை சேர்ந்தவர்கள் எளிதில் சுவிஸில் வேலைவாய்ப்பை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

101

மேலும் செய்திகளை வாசிக்க

104

மேலும் செய்திகளை வாசிக்க

105

மேலும் தகவல்களை வாசிக்க

106

மேலும் கவிதைகளை வாசிக்க

100

மேலும் செய்திகளை வாசிக்க

103

மேலும் தகவல்களை வாசிக்க

103

மேலும் அறிந்து கொள்வோம்.

108

மேலும் படங்களை பார்வையிட