visits since Apr 01, 2014

Besucherzaehler

வின்ரி அமைப்புக்கள்
உங்கள் கருத்து
Flag Counter

சுவிட்சர்லாந்தில் பயங்கரவாத தடுப்பு பொலிசார் மேற்கொண்ட அதிரடி வேட்டை காரணமாக மர்ம நபர்கள் இருவர் கைதாகியுள்ளனர்.சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்தில் சனிக்கிழமை மாலை 3 மணியளவில் இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளதாக பொலிஸ் தரப்பு

625.117.560.350.160.300.053.800.210.160.90தகவல் வெளியிட்டுள்ளது.

ஆண் பெண் என இருவரை கைது செய்துள்ள பொலிசார், குற்றவியல் நடவடிக்கைகளில் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக உறுதியான ஆதாரங்கள் சிக்கியதால் மட்டுமே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைதான இருவரும் எந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர்கள் என பொலிசார் வெளிப்படுத்த மறுத்துள்ளனர். ஆனால் கைதான இருவரும் ஐ.எஸ் அல்லது அல் கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்ற தகவலை பொலிஸ் தரப்பு மறுக்கவில்லை.

ஜெனீவா பகுதியில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய நபர் ஒருவரை கைது செய்ததன் பின்னனியில் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

கைதான ஜெனீவா நபர் ஐ.எஸ் அமைப்புக்கு ஆட்களை சேர்க்கும் பணியில் கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சமீப நாட்களாக பயங்கரவாத அமைப்புகளால் ஐரோப்பிய நாடுகளில் நிகழ்த்தப்படும் பயங்கரவாத தாக்குதல்களை கருத்தில் கொண்டு சுவிஸ் அரசும் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

103

மேலும் தகவல்களை வாசிக்க

103

மேலும் அறிந்து கொள்வோம்.

108

மேலும் படங்களை பார்வையிட